இவர் தாங்க நம்ம இளம் வில்லேஜ் விஞ்ஞானி. கிராமத்துல பொறந்து வளர்ற, 8-12 வயசுக்குள்ள உள்ள ஒரு சின்னப்பையன். படிக்கிறதக்கூட மனப்பாடம் பண்ணாம புரிஞ்சுகிட்டு தனக்கு தெரியுற மாதிரி கொடுக்கிற புள்ள. ஒரு ஆராய்ச்சியாளர் ஆகணும்’கிறது தான் அவர் கனவு ( அது என்ன ஆச்சு’ன்னு கடைசியில பாக்கலாம்) கண்ணுலயே அவ்வளவு கனவையும் கேள்விகளையும் ஆர்வத்தையும் தேக்கி வச்சுருந்த அந்த வயசுல அவர் பண்ணினத எல்லாம் நினைச்சா ஆச்சரியமா இருக்கு.
இப்படித்தான் ஒரு தடவ, வீட்டுக்கு பின்னாடி தண்ணி தேங்கி இருந்திருக்கு. அதுல இருந்து கொசுவா கிளம்பிருக்கு. இதப் பாத்த நம்ம இ.வி.வி. யோசிச்சு இருக்காரு. எப்புடி கொசு வருது’ன்னு. சரி தண்ணி இருக்கதால அது மேல வந்திருது. அத சாகடிக்கணும்’னா என்ன பண்ணலான்னு தீவிரமா யோசிச்சதில மண்ணெண்ணெய் தெளிச்சு விடலான்’ற முடிவுக்கு வந்தாரு. அத சும்மா தெளிச்சா நாம எப்புடி விஞ்ஞானி? மறுபடியும் யோசிச்சதுல அண்ணன் செண்ட் பாட்டில் ஞாபகம் வந்திச்சி.அய்ய்! அதுல மண்ணெண்ணெய்ய ஊத்தி சும்மா புஸ்ஸு புஸ்ஸுனு அடிச்சா? செண்ட் பாட்டில உடனெ எடு. மேல மூடிய கழட்டு. மூளை அப்படியே கட்டளைகள் கொடுத்திட்டே இருக்கு. மண்ணெண்னையா ஊத்தியாச்சு. அடிச்சி பாத்தா வரல!! இப்ப என்ன பண்றது..என்னவா இருக்கும்’னு யோசிச்சதுல உள்ள அழுத்தம் பத்தலைன்னு கண்டுக்கிட்டாரு.
அழுத்தத்திற்கு என்ன பண்ணாலான்னு பாத்தா, சைக்கிள்கடைக்கார மாமா இருக்காரே. அவர்கிட்ட இருந்து காத்தடிக்கிற பம்ப்ப வாங்கிட்டு வந்து காத்தடிச்சா சரியாயிடும்’னு முடிவு பண்ணி, செண்ட் பாட்டில்’ல அழுத்துற மூடிய திறந்து உள்ள இருக்க அந்த சின்ன குழாய்’ல காத்தடிக்க முயற்சி பண்ணினாரு. அடிக்க முடியல. எப்புடி கனெக்ஷன் கொடுக்கிறது? வால்ட்யூப் வைச்சு அடிச்ச உடனே, பாட்டில அழுத்தம் வந்திருச்சு. ஆனா பம்பில அழுத்தம் அதிகமாகி, வால்வு உள்ளாற போயி, மண்ணெண்ணெய் உள்ள போயி க்ரீஸ் எல்லாம் எடுத்திருச்சு. அதுக்கப்புறம் காத்தே அடிக்க முடியல. பம்பு தான் புஸ்ஸு புஸ்ஸு’னுது. அமைதியா போயி அத இருந்த இடத்தில வச்சிட்டு எஸ்கேப்பு ஆகி வந்திட்டாரு.
அவங்க ஊரில, ஆஸ்பத்திரி’யில இருந்து உபயோகப்படுத்தின சலைன் பாட்டில், அந்த ட்யூப், ஊசி, சிரிஞ்ச், மருந்து பாட்டில் எல்லாம் ஒரு இடத்தில போட்டுருப்பாங்க. அந்த சலைன் பாட்டில் மேல அவருக்கு அவ்வளவு காதல். அத எடுத்திட்டு வந்து, அந்த வட்டத்தை திருகினா எப்படி தண்ணி வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முடியுது’ன்னு பாத்துக்கிட்டேயிருப்பாரு. அத வச்சு என்ன பண்ணலான்னு யோசிச்சு அவர் கண்டுபுடிச்சது தான் சொட்டு நீர் பாசன முறை. தான் வளர்த்த செடிக்கு பக்கத்துல இருந்து தண்ணி ஊத்த முடியலயே’ன்ற வருத்தத்த தீர்த்துக்கிறதுக்காக, இந்த சலைன் பாட்டில செடிக்கு மேல தொங்கவிட்டு, தண்ணிய சொட்டு சொட்டா இறங்கற மாதிரி பண்ணி விட்டுட்டாரு, பள்ளிகூடத்திலேர்ந்து திரும்பி வர வரைக்கும் தண்ணி கிடைச்சுட்டே இருக்கணுமாம் செடிக்கு!
இவருக்கு வாங்கிக்கொடுத்த வாட்ச்சும் கடிகாரங்களும் பட்ட பாடு இருக்கே! ஒரு குருவி வெளிய வந்து கத்துமே அந்த கடிகாரம் வாங்கி மாட்டிருந்தாங்க பள்ளிகூடத்துல. அது எப்புடி வெளியே வந்து கத்துது’ன்ன்மு அவரு மண்டைகுள்ள பிறாண்டிக்கிட்டே இருந்திச்சு. இரண்டு மூணு தடவை ஏறி பாக்க முயற்சி செஞ்சப்ப எல்லாம் ஏறும் போதே பிடிபட்டதுனால அந்த கடிகாரம் தப்பிச்சிது. அந்த தாகத்த அவரு தன் கடிகாரங்கள் கிட்டயே தீர்த்துக்க ஆரம்பிச்சாரு. கால்குலேட்டர் வாட்ச்’அ அக்கு வேறா ஆணி வேறா கழட்டி பொட்டலம் கட்டி வச்சிருந்திருக்காப்ல. என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க’ன்னு கேட்டா, அதுல எப்புடி அலாரம் அடிக்குது’னு செக் பண்ணேன்’னு பதில் வந்திருக்கு. இன்னொரு வாட்ச்சு’ல இருந்த ஸ்க்ரூ எல்லாம் இவரு ஆர்வம் தாங்காம கொஞ்ச கொஞ்சமா லூசா ஆகி கழண்டே விழுந்திருக்கு. அத சரி பண்ண ஸ்க்ரூ’வுக்கு பதிலா ஒரு கம்பிய உள்ள செருகி கட்டிட்டு ரொம்ப நாளா அட்சஸ் பண்ணிட்டு இருந்தாரு
இவரும் இவர் கும்பலும் சும்ம சுத்திட்டு இருந்த் நேரத்தில ஒரு தடவை ஓணான் மாதிரி கொஞ்சம் பெருச்சா ஒண்ணை பாத்து, அத சுருக்கு கயிறு போட்டு எப்டியோ புடிச்சு பள்ளிகூடத்துக்கு எடுத்திட்டு வந்திருக்காங்க. அத சயின்ஸ் வாத்தியார்க்கிட்ட காமிக்கவும், ‘அட, இது உடும்புடா’ன்னு ஆச்சரியப்பட்டு, இத பாடம் பண்ணி வைக்கலாம்’, நம்ம லேப்’லயே. குளோரோபார்ம் குடுத்து மயங்கவைச்சு, 10% ஃபார்மால்டிஹைட் ஊத்தி அதுக்கேத்த மாதிரி பாட்டில்ல போட்டு மூடி வைச்சுடுங்க டா’ன்னு தெரியாத்தனமா பாடம் பண்றத சொல்லிகொடுத்திட்டு போயிட்டாரு, அதுக்கப்புறம் லேப் நிரம்பி வழியுற அளவுக்கு ஓணான், வெட்டுக்கிளி, பச்சோந்தி’ன்னு சிக்குறத எல்லாம் பாடம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மிஞ்சல வீட்ல.
இந்த தண்ணித்தொட்டி’ல ஒரு குழாய போட்டு உறிஞ்சி விட்டா இன்னொரு பாத்திரத்துல எடுக்கிறத (பள்ளிக்கூடத்தில Siphon விதி சொல்லிகொடுக்கிறதுக்கு முன்னாடியே) கண்டுபுடிச்சது’ல இருந்து இந்த ஆராய்ச்சிக்கும் ஒரு அளவே இல்லாம இருந்தது. பாத்ரூம்’க்கு மேல ஒரு அண்டா’வ வச்சு அதுல தண்ணிய ஏறி ஏறி ஊத்தி, குளிக்க குளிக்க ஆட்டோமேட்டிக்’கா தண்ணி நிரம்ப வழி பாத்திருக்காரு. தண்ணிய மேல ஏறி ஊத்தி கம்பெனிக்கு கட்டுபடியாகல’ன்றதுனால நேர கிணத்துலயே நீளமான குழாய விட்டு உறியோ உறி’ன்னு உறிஞ்சிருக்காரு. முடியாம மூச்சு திணறுனதுனால அந்த முயற்சி தோல்வியடைஞ்சுது.
ஒரு நாள் டீச்சர் இங்க் ரிமூவர் பாட்டிலக் கொடுத்து சிலதை அழிச்சு தர சொல்லியிருக்காரு அவரு நோட்ல. அப்ப அதெல்லாம் வாங்கறதுக்கு ரொம்ப அதிகப்படியான விஷயம். நம்ம இங்க் ரப்பர்’ல எச்சியத்தொட்டு வரட்டு வரட்டு’னு அழிச்சு பேப்பரையே கிழிச்சிட்டு இருந்த் காலம். ஆசையா அழிச்சிட்டு இருந்தப்ப தான் அந்த வாசனை அவரை ஏதோ பண்ணிச்சு. ரொம்ப பரிச்சயப்பட்ட வாசனையா இருக்கே’னு ரொம்ப யோசிச்சு, அட, நம்ம ப்ளீச்சிங் பவுடர்’னு பல்பு எரிஞ்சுது. வீட்டுக்குப் போன உடனே ப்ளிச்சிங் பவுடர தேடி எடுத்து கொஞ்சமா தண்ணியில கரைச்சு நோட்டில தொட்டு அழிச்சா, அட, போகுது!! இதான் நம்ம இங்க் ரிமூவரா!! அத கிடைச்ச மருந்து பாட்டில்’ல எல்லாம் அடைச்சு, சாக்பீஸ் டப்பா’ல வச்சு எல்லா க்ளாஸ்’லயும் விக்க ஆரம்பிச்சிட்டாரு. இதுக்கு டெமோ பீஸ் வேற! அழிச்சு அழிச்சு இவர் கையே பொத்து போகுற நிலைமை வந்தத பார்த்திட்டு எல்லாருக்கும் தொட்டு அழிக்க இலவசமா பஞ்சும் கொடுத்தாரு. இந்த விஞ்ஞானிக்குள்ள ஒரு தொழிலதிபரும் இருந்திருக்காரு பாருங்களேன்!
இவ்வளவு ஆர்வக்கோளாறா திரிஞ்ச புள்ள இப்ப என்ன பண்ணுது’ன்னு கேட்டீங்கன்னா, சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகி ராவும் பகலுமா பொட்டியத் தட்டிகிட்டு இருக்காரு. கண்ணுல தூக்க கலக்கமும் மண்டை’ல குழப்பபுமா.
பி.கு : பொருத்தமான ஓவியங்கள் செய்து கொடுத்த தோழி அனிதா மற்றும் ஏற்பாடு செய்த நண்பருக்கும் நேசங்களும் நன்றிகளும்
14 comments:
//இவ்வளவு ஆர்வக்கோளாறா திரிஞ்ச புள்ள இப்ப என்ன பண்ணுது’ன்னு கேட்டீங்கன்னா, சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகி ராவும் பகலுமா பொட்டியத் தட்டிகிட்டு இருக்காரு. கண்ணுல தூக்க கலக்கமும் மண்டை’ல குழப்பபுமா.//
நல்லா இருக்குங்க... தொடரவும். வாழ்த்துக்கள்
//இவருக்கு வாங்கிக்கொடுத்த வாட்ச்சும் கடிகாரங்களும் பட்ட பாடு இருக்கே! ஒரு குருவி வெளிய வந்து கத்துமே அந்த கடிகாரம் வாங்கி மாட்டிருந்தாங்க பள்ளிகூடத்துல. அது எப்புடி வெளியே வந்து கத்துது’ன்ன்மு அவரு மண்டைகுள்ள பிறாண்டிக்கிட்டே இருந்திச்சு. //
கலக்கல் விஞ்ஞானி
Happy Birthday - ஏ.ஆர்.ரஹ்மான்
Nejamalume neenga oru village vingaani boss..
ஹையோ..... அப்படியே என் வாழ்கை திரும்பி பார்த்த மாதிரியா இருக்கு.............
அடுத்த பதிவு கழட்டி கண்டமாக்க பட்ட கம்ப்யூட்டர்[கள்] பற்றி தானே.
சூப்பர் சகோ. தொடருங்கள்.
நீங்கள் ஒரு இளம் கிராமத்து விஞ்ஞானி பாஸ் (தமிழ்ழ சொல்லனும்ல, அப்புறம் பாஸ் இப்போ தமிழ் வார்த்தையா மாத்திட்டாங்க.
super joke
very nice sir
shareef
அடிக்கடி எழுதுங்க..
@ மதுரை சரவணன் - நன்றி :)
@ டிலீப் - முதல் வருகைக்கு நன்றி.
@ லோகு - ஹி ஹி நன்றீ..
@ சேக்காளி- கண்டமான கம்ப்யூட்டர் - தலைப்பு நல்லா இருக்கே - ட்ரை பண்ணிருவோம் :)
@ ராஜகிரி - நன்றி பாஸ் :)
@ ஷரீஃப் - நன்றி. சிரிங்க சிரிங்க :)
@ ரிஷபன் - நன்றி. கண்டிப்பா எழுதிடலாம் புது வருஷத்துல :)
குட்டி...அந்த இ.வி.வி. யார்ன்னு கடைசி வரைக்கும் சொல்லவேயில்லையே.
நீங்கதானே !
கேரக்டர்ஸ்- நல்லாயிருக்கு,தொடரவும்
ஹாஹாஹா முடியல.. சிரிச்சுக்கிட்டே படிச்சேன்..:))
Post a Comment