Thursday, September 2, 2010

ஆறு வார்த்தைக் கதைகள்

நண்பரின் வலைப்பதிவில் பார்க்க நேரிட்ட அவரின் வலைப்பதிவும்(angumingum.wordpress.com), கொடுத்திருந்த இன்னொரு வலைப்பக்கமும் ஆர்வத்தை தூண்டியது. சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்று தான். முயற்சிகள் கீழே.


-0-

இன்றே தேட ஆரம்பிக்கிறேன், நாளை தொலையும் அவளை

-0-

இங்கு தான் இருக்கவேண்டும் அது. இல்லாமலும் இருக்கலாம்.

-0-

எல்லாக் கடனையும் அடைச்சிடலாம்‘னு போனவன் திரும்பியே வரல.

-0-

“பிடிச்சிருக்கா?முடிச்சிரலாமா?

அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.


-0-

பேச‌லான்னு தான் போனேன். ஆனா அப்ப‌டி ஆயிடுச்சு.

-0-

திடீரென‌ விற்ப‌னை அதிக‌மான‌து. க‌ல‌வ‌ரம் மூண்ட‌தில் சோடாபாட்டில்க‌ள்.

-0-

“என்ன‌ ந‌டக்குது‘னு பாத்திட‌லாம்“. லேசாய் கால்க‌ள் உத‌றிய‌ப‌டி.

-0-

புதைய‌ல் சிக்கிய‌து. திற‌ப்ப‌தில் போட்டி. புதைந்த‌ன‌ உட‌ல்க‌ள்.

-0-

உன்னைப் புடிக்கும். ஆனா வேணாம். ந‌ண்ப‌ர்க‌ளாவே இருக்கலாமே..

-0-

ம‌ழையில் ந‌னைந்து ஒதுங்கிய‌ ஆளில்லா கொட்ட‌கையில் பின்ன‌ர்…

-0-

இன்று இர‌வு செய்தி கிடைக்கும். அதுவ‌ரை காத்திரு.

-0-

ப‌சியில் அழும் குழ‌ந்தை. வ‌றுமையில் தாய் த‌ற்கொலை.

-0-

ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் இரு வார்த்தைகள் சேர்த்து எழுதியும் ஒரு வார்தையாக கொடுக்கலாமா தெரியவில்லை. முடிந்தவரை அவற்றையும் தவிர்த்திருக்கிறேன்.

கருத்துக்களையும் உங்க கதைகளையும் சொல்லுங்க!

6 comments:

Thekkikattan|தெகா said...

வார்த்தை சிக்கணுமின்னு யோசிச்சி யோசிச்சு சிறுகதைக்கு உரிய விசயங்களை எல்லாம் ஆறு வார்த்தைகளுக்குள் போட்டா எப்படி...

மெஜாரிடி நல்லாருந்துச்சு. அதிலும் ரொம்ப பிடிச்சது...


//*இன்றே தேட ஆரம்பிக்கிறேன், நாளை தொலையும் அவளை

*திடீரென‌ விற்ப‌னை அதிக‌மான‌து. க‌ல‌வ‌ரம் மூண்ட‌தில் சோடாபாட்டில்க‌ள்.

*என்ன‌ ந‌டக்குது‘னு பாத்திட‌லாம்“. லேசாய் கால்க‌ள் உத‌றிய‌ப‌டி.

*புதைய‌ல் சிக்கிய‌து. திற‌ப்ப‌தில் போட்டி. புதைந்த‌ன‌ உட‌ல்க‌ள்.

*உன்னைப் புடிக்கும். ஆனா வேணாம். ந‌ண்ப‌ர்க‌ளாவே இருக்கலாமே..//

ரிஷபன் said...

ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் என்னால் எழுத முடியல.

vinu said...

வார்த்தைகளை சலித்ததில் கவிதை தொலைந்து கதை கிடைத்தது

R. Gopi said...

சிக்ஸர் அப்படின்னு சொல்லலாமா இதை?

வினு, முடியல

மோகன்ஜி said...

'நல்ல முயற்சி எனப் பின்னூட்டம் இட்டது யாரென...'

Kaki said...

*ப‌சியில் அழும் குழ‌ந்தை. வ‌றுமையில் தாய் த‌ற்கொலை.
**திடீரென‌ விற்ப‌னை அதிக‌மான‌து. க‌ல‌வ‌ரம் மூண்ட‌தில் சோடாபாட்டில்க‌ள்.

These lines are too touching..

Seetha ...inda pudu muyarchiku enadu paratukal..

As usual... Seeha Barathi on showing difference.

:)

Post a Comment

Related Posts with Thumbnails