
இதென்ன பெரிய பழக்கமா, நான் எப்ப நினைச்சாலும் விட்டுருவேனாக்கும் என சவடால் பேசித்திரியும் நண்பர்களுக்கும்
விட்டுரணும் என்ன பண்றது முடியலயே என வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஃபீலிங்வியாதிகளுக்கும்
இதோ அடுத்த மாசத்தோட நான் நிறுத்தறேன் என வரவே வராத அடுத்த மாசத்திற்காய் காத்திருக்கும் ‘எதையுமே ப்ளான் பண்ணி பண்ணுற’ ப்ளானர்களுக்கும்
நான் ரொம்ப’லாம் அடிக்கிறதில்ல.. ரெண்டே ரெண்டு தான் (பாக்கெட்டா, சிங்கிளா??)என தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொள்ளும் மக்களுக்கும்
மென்த்தால் ஃப்ளேவர் அடிச்சா எஃபெக்ட்டு கொஞ்சம் கம்மியாமே என மனதைத் தேத்திக் கொள்ளும் அரைமண்டைகளுக்கும்
அந்த மெல்லிசா ஒண்ணு வந்திருக்கே அது அடிச்சா பாதி அடிச்ச மாதிரி தானாமே என சந்தோஷப்பட்டுகொள்ளும் அறிவுஜீவிகளுக்கும்
செலவழிக்கிறதயும் புகையையும் பாதியா கம்மி பண்றேன்னு பயங்கரமா யோசிச்சு எப்பவுமே எச்சி புகையே அடிக்கிற கூட்டங்களுக்கும்
இந்த மாதிரியெல்லாம் இல்லனா நான் அடிக்கவே மாட்டேன் தெரியுமா’னு ஒரேடியா ஃபீலிங்ஸ் உடுற பார்ட்டிகளுக்கும்
ஆமா நாங்க புகைக்கிறதால தான் மத்தவங்களும் பாதிக்கப்படுறாங்களா’னு வியாக்கியானம் பேசுற தலைங்களுக்கும்
எல்லா விளைவுகள் பத்தியும் தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரியே நடந்துக்கிற அத்தனை பேருக்கும்
இன்னிக்கோ சீக்கிரமோ உண்மையாவே மண்டையில உரைக்க
தானும் ஆரோக்கியமா இருந்து தன் குடும்பத்தையும் மத்தவங்களையும் ஆரோக்கியமா இருக்க வைக்க
மகமாயி அருள் செய்யணும் தாயே!!!
