நண்பரின் வலைப்பதிவில் பார்க்க நேரிட்ட அவரின் வலைப்பதிவும்(angumingum.wordpress.com), கொடுத்திருந்த இன்னொரு வலைப்பக்கமும் ஆர்வத்தை தூண்டியது. சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்று தான். முயற்சிகள் கீழே.
-0-
இன்றே தேட ஆரம்பிக்கிறேன், நாளை தொலையும் அவளை
-0-
இங்கு தான் இருக்கவேண்டும் அது. இல்லாமலும் இருக்கலாம்.
-0-
எல்லாக் கடனையும் அடைச்சிடலாம்‘னு போனவன் திரும்பியே வரல.
-0-
“பிடிச்சிருக்கா?முடிச்சிரலாமா?
அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்.
-0-
பேசலான்னு தான் போனேன். ஆனா அப்படி ஆயிடுச்சு.
-0-
திடீரென விற்பனை அதிகமானது. கலவரம் மூண்டதில் சோடாபாட்டில்கள்.
-0-
“என்ன நடக்குது‘னு பாத்திடலாம்“. லேசாய் கால்கள் உதறியபடி.
-0-
புதையல் சிக்கியது. திறப்பதில் போட்டி. புதைந்தன உடல்கள்.
-0-
உன்னைப் புடிக்கும். ஆனா வேணாம். நண்பர்களாவே இருக்கலாமே..
-0-
மழையில் நனைந்து ஒதுங்கிய ஆளில்லா கொட்டகையில் பின்னர்…
-0-
இன்று இரவு செய்தி கிடைக்கும். அதுவரை காத்திரு.
-0-
பசியில் அழும் குழந்தை. வறுமையில் தாய் தற்கொலை.
-0-
ஆங்கிலத்தைப் போல் அல்லாமல் இரு வார்த்தைகள் சேர்த்து எழுதியும் ஒரு வார்தையாக கொடுக்கலாமா தெரியவில்லை. முடிந்தவரை அவற்றையும் தவிர்த்திருக்கிறேன்.
கருத்துக்களையும் உங்க கதைகளையும் சொல்லுங்க!
Showing posts with label ஆறு வார்த்தைக் கதைகள். Show all posts
Showing posts with label ஆறு வார்த்தைக் கதைகள். Show all posts

